Tuesday, October 28, 2008

கேள்வி பதில் பாகம் -2

13.11.09

திருமதி ராகினி அவர்களே வணக்கம்
என் பெயர் தமிழ்நிலா
உதவிக்கு முதலில் வருவது நட்பின் கரங்களா உறவின் கரங்களா.... உறவின் கரங்கள் என்றால் எப்படி?எப்போதெல்லாம்....தயவு கூர்ந்து மெயில் செய்யவும்.
நன்றி வணக்கம்

முதல் உங்கள் வருகைக்கு நன்றி தமிழ் நிலா.
உறவுகள் இல்லாத இடத்தில் நட்பு முன்னிலையில் நிக்கின்றது.
நம்மோடு என்றும் கை கோர்த்து நிற்பது நட்பு.
காரணம்
எதுவும் நம்மிடத்தில் எதிர்பார்க்காதது
நமக்கு கஸ்ரம் வந்தால் உடனே கைகொடுப்பது
காப்பாற்ற தயங்காது.
உதவி செய்து விட்டு மொளனமாய் இருப்பது.
உறவுகள்.. உதவி செய்வார்கள் ஆனால் பலனை எதிர்பார்ப்பார்கள்பின்பு பலமுறை சொல்லி சாகடிப்பார்கள்.
உதவி செய்து விட்டு அதற்க்கு மேலாக எதிர்பார்ப்பார்கள்.பின்பு நம்மால் அவர்களுக்கு உதவி செய்யமுடியாமல் போனால்.
திட்டி தீப்பார்கள்.இதனால் உறவே இரண்டாக முறிந்து விடும்.அவர்கள் உதவிக்கு வருவது எப்போது என்றால் வீட்டில் நண்மை தீமையில் கலந்து கொள்வார்கள்.
சபையில் நல்ல பெயர் எடுப்பதற்குபின்பு சென்றுவிடுவார்கள்.
நாம் சுகையீனமாக இருந்தலே வந்து பார்த்துவிட்டு செல்வார்கள் அதை கூட சொல்லிக்காட்டுவார்கள்.
அதனால் நட்பு ஒன்றே சிறந்த உதவி
-----------
3.11.09

வணக்கம் ராகினி

உங்கள் படைப்பை T R T வானொலிகேட்டுஇருகின்றேன்உங்களால் எப்படி இத்தனை படைப்புக்களையும் நிகழ்ச்சியும்தயாரிக்க முடிகின்றது? நாம்மவர்கள் சின்னதிரை சினிமா என்றமோதில்இருக்கின்றகள் உங்கள் படைப்புக்கு வரவேப்பு கிடைக்கின்றதாநாம்மவர்கள் இதில் வெற்றி காணமுடியதற்கானகாரணம்இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?உங்கள் ஒலிப்பதிவை அனுப்பி வைக்கவுமஉங்கள் பணி தோடர வாழ்துக்கள்நான்றிகள்
அன்புடன் பிரபா

வணக்கம் உங்கள் மடல் கண்டு சந்தோசம் என் நிகழ்ச்சி இப்போ ஜெர்மன் வானொலியில் மதியம் 2 மணிக்கு போகின்றது கேட்கவும் எனக்கு சின்ன வயதில் இருந்தே இந்த ஆர்வம் அதாவது இசை . அறிவிப்புத்துறை என்று இருந்தது புலம் பொயர் வாழ்வில் எனது பொழுது போக்கு கவிதை கட்டுரை சிறுகதை என்று அதிகம் கவிதை எனக்கு பித்த விடயம் இரண்டும் இசை கவிதை இரண்டும் சேர்ந்து என்னை இந்த அழவுக்கு வளர்க்கின்றது.அதிகமான மடல் வந்தவண்ணம் இருக்கும் என் உயர்வுக்கு காரணம்.உங்களைபோல் ரசகர்கள்தான் அவாகள் அனுப்பிய மடல்களை பார்வையிடவும்.உங்கள் முகவரியை தரவும் கண்டிப்பா பதிவுகள் அனுப்புகின்றேன்.
இத்துறையில் இருக்கும் போது நம்மை நாம்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் இதுவே முதற்படி
----------.

நினா. கண்ணன்
இந்தியா.

உலகில் கடற்கொள்ளை என்பது புத்தகத்தில் தான் படித்திருக்கிறோம்.ஆனால் இப்போது அது நம் கண்முன்னே நடக்கிறது.இதற்க்கு தீர்வு என்ன?

தீர்வு கொள்ளை அடிப்பவனிடம் தான் இருக்கின்றது
தான் செய்யும் தொழில் சரியா என்று தன்னை திரும்பிப்பார்க்கும் வரை
அவன் கொள்ளை அடிக்கத்தான் செய்வான்.

----
லோகநாதன் பிரகலா.பரித்தித்துறை.ஜெர்மனி

கவலையை மறக்க முடியாமல் உள்ளது ஏன் என்ன? செய்யலாம்.?


கவலை என்பது நமே உருவாக்கி கொள்வது
சில நேரம் நம்மை அறியாமல் தானாக நம்மை சூழ்ந்து விடும்
மனது உறுதியாக இருந்தால் எதையும் மறக்க முடியும் .
நினைக்கும் மனதுதானே மறக்கவும் செய்யும் அதனால் உங்களை நீங்கள் நம்புகள்.
மனதை கண்டபடி போட்டு அலட்டாதீர்கள்
நீங்கள் எதை அதிகம் விரும்புகின்றீகளே அதை நடை முறைக்கு கொண்டு வரவும். கவலைகள் உங்களை விட்டு போகும்


ஒருவர் ஒருவரை புரிந்து கொள்ளாது ஏன் வேதனைப்படுத்துகின்றார்கள்.?
அது அவர்கள் இயலாமை . அப்படியானவர்களை விட்டு விலத்திச்செல்லுங்கள்..

உங்கள் பல திறமைகளை அதிகமாக வளர்க்க ஆசை இல்லையா?
ஏன் இல்லை இருக்கின்றது.

நீங்கள் இந்தியா சென்று உங்கள் கலையை வளர்க்க ரசிகர்களாகிய எங்கள் விருப்பம். உங்கள் விருப்பம் எது.?

நிறைய ஆசைகள் உள்ளது. காலம் என்ன நினைக்கின்றதோ அதை நான் ஏற்க தயார்.
உங்கள் ஆசீர்வாதம நல்லதாய் நடக்கட்டும்.

லோகநாதன் பிரகலா.
பரித்தித்துறை.ஜெர்மனி.


----


தர்மதாசன் ராகினி இத்தாலி
28.5.09

முதல் என் பெயர் உங்களுக்கும் இருப்பதை என்பதை விட உங்கள் பெயர் தான் என் பெயர் என்று சொல்வதில் என் மண்ணுக்கும் எனக்கும் பெருமை. என்பதை சொல்ல என் உள்ளம் பூரிப்படையகின்றது.

எனது கேள்வி !
இத்தனை கலைத்துறையை வளர்த்தற்கு எது உதவியது.?

முதல் வீட்டில் உள்ள கணணி. அடுத்தது லண்டன் தமிழ் வானொலி. பின் ரி ஆர் ரி தமிழ் வானொலி பாரிஸ்.

உங்கள் திறமை வளர யார்காரணம் கணவாரா? பிள்ளைகளா? அம்மா அப்பாவா? நண்பரா?
முதல் என் மகன் அடுத்தது கணவர்.

இலங்கையில் இதை பின்பற்றினீர்களா?
பாடசாலையில் தான் பின்பற்றிக்கொண்டது.
---
27.5.09

அமெரிக்கா.பாலசுந்தர்
"எனது கேள்வி"
உங்கள் வரவுக்கும் கேள்விகளுக்கும் நன்றி.

உங்களை கடவுள் வந்து ஒரு வரம் கேட்டால் என்ன கேட்பீர்கள்.?
மறுபடியும் நானே பிறக்க வேண்டும் என்று.

நீங்கள் யாரை பார்க்க ஆசைப்படுகின்றீர்கள்.?
மறு ஜென்மம் ஒன்று இருந்தால் என் தாய் தந்தை பிறந்து வரவேண்டும் நான் பார்த்து மகிழ.

நீங்கள் அதிகம் விரும்பிய ஆசை நிறைவேறியதா? இல்லையா?
அதிகம் விரும்பிய ஆசை நான் ஒரு அறிவிப்பாளராக வரவேண்டும் என்று இப்போது நிறைவேறியது.

உங்கள் வாழ்வில் முதல் நன்றியாக நினைப்பவர் யார்.?
லண்டன் தமிழ் வானொலி உரிமையாளர் அறிவிப்பாளர். திரு நடாமோகன் அவர்களுக்கு.
உங்களை அதிகம் பேசியவர் கணவரா? அப்பாவா? அம்மாவா?

யாரும் இல்லை.
உங்கள் குரல் இனிமைக்கு காரணம் என்ன?
இறைவன் கொடுத்த வரம்.

உங்களிடம் பல திறமைகள் கண்டேன் உங்கள்இணையத்தில்.
எப்படி ஆர்வம் வந்தது.?

தனிமை என்ற வாழ்வு புலம் பெயர்வில். அதாவது காலை கொஞ்ச நேரம் தனிமை வரும் யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள்.எல்லா வேலைகளும் முடித்துவிட்டு என்னை நான் திரும்பி பார்த்த போது இத்தனையும் மலர்ந்தது.

------
30.4.09
கடவுள் நம்பிக்கையை வளர்ப்பது எப்படி?
முதல் தாயிடம் நம்பிக்கையாக நடவுங்கள் அதன் பின் கடவுள் நம்பிக்கை தான வரும்.

பணம் உள்ளவன் பணம் இல்லாதவருக்கு கொடுத்து உதவ மறுக்கின்றானே ஏன்?
இதைத்தான் சொல்வது தானும் உண்மாட்டான் பிறரையும்
உண்ணவிடான் என்று.
சொர்க்கம் எங்கே உள்ளது?
உங்கள் மனதில் உங்கள் இல்லத்தில்.

திருச்சி.
கிருஷ்ணா .

-----------
இன்றுதான் உங்கள் கேள்வி பதில் கண்டேன். ஒவ்வொரு கேள்விகளுக்கும் அழகாக பதில் கொடுத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
எனது கேள்வி இது.

நீங்கள் எப்படி எல்லாவற்ரையும் திறம்பட செய்ய முடிகின்றது அதாவது கேள்வி பதில், கவிதை ,நீங்கள் எழுதி பாடும் பக்தி கீதம் உங்கள் குர
ல் அருமை.
கவிதையில் பூத்தபாடல்.அப்பாடா இத்தனையும் செய்வதற்கு எப்படி முடியும் ?
என்னைப் பெற்ற பெற்ரோருக்கு முதல் நன்றி எனக்கு இசையை உணவாக ஊட்டி வளர்த்ததால் தான் என்னால் இத்தனையும் செய்ய முடிகின்றது

என் முதல் கவிதை நிலாமுற்றத்தில் பதிவு செய்தேன்
அதன் பின்பு அந்திமழை கீற்று.காம் தேன் கூடு பிரவகம் முத்தமிழ் மழழைகள்.காம் என்ற இணையங்களில் எழுதினேன் நிலாவில் இருந்த கவிதைகளை படித்து பதிவு செய்து திரு.யாழ் சுதாகருக்கு அனுப்பினேன் அவர் கேட்டுவிட்டு வானொலியில் நிகழ்ச்சி செய்யலாமே என்று கூறினார். 2005 இல் நான் அதை பெருதும் என்ன வில்லை அதன் பின் என் குரல் இணையத்தில் பதிவாகியது.அதை கேட்ட மழழைகள் உரிமையாளர் என் பதிவை எடுத்து தன் இணையத்தில் போட்டார்.அதை கேட்ட பலர் என் குரலுக்கும் என் ஆக்கத்துக்கும் கூக்கம் கொடுத்தார்கள் காலம் கடநஇதபின் சென்றவருடம் திருயாழ் சுதாகர் அவர்கள் லண்டன் தமிழ் வானொலியில் ஜனாவின் பழையபாடல் தொகுதியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். நானும் கேட்டேன் அன்று கேட்காவிட்டிருந்தால் இன்று நான் நீங்கள் கேட்கும் கவிதையில் பூத்த பாடல் நிகழ்சி செய்திருப்பேனா..? திரு யாழ் சுதாகர் திரு ஜனா அவர்கள். திரு நடாமோகன் அவர்களுக்கு என் மனம் நிறைவான நன்றி.
அது மட்டும் அல்ல. என் குரலை இணம் கண்டு என்னை இந்த அளவுக்கு உலகிற்கு காட்டியவர் திரு யாழ் சுதாகர் அவர்கள்.
அதன்பின் என்குரல் தன் சீடியில் வரவேண்டும் என்று எனக்கு ஒரு வாய்பு தந்து உலகம் முழுவதும் என்னை இண
ம் காட்டியது இசை அமைப்பாளர் திரு.வி.எஸ் உதயர்(இந்தியா) அவர்கள் வசீகரன் கவிதை வரிகளில் வொளியான காதல் வாணம் என்ற பதிவு.

இத்தனைக்கும் எனக்கு கணணி வாங்கி தந்து ஒவ்வொரு விடயங்களை கற்ருத்தந்தவர் என் மகன் திணேஷ்


உங்கள் கேள்விகள் என்னை உணரவைத்தது .
எல்லாவற்றுக்கும் காரணம் கடவுள் தான் அவனுக்கே இந்த புகழ்யாவும்.
(உங்கள் கேள்விகளை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும் )
----------
தி.பரா
ஜேர்மன்
காதல் எப்படி இருக்கவேண்டும்?
ஒருவரை ஒருவர் துடிப்போடு நேசிக்கவேண்டும் முழுமையான அன்பை கொடுக்க வேண்டும் பொய் என்பதை மறக்க வேண்டும் கடசிவரை ஒருவரை மட்டும் காதல் செய்யவேண்டும்எந்த நிலையிலும் காதலியை காதலன் கைவிடக்கூடாது அலர்ச்சியம் செய்யகூடாது காணவன் மனைவியாக இறந்து விடனும். இல்லை என்றால் வேண்டாம் காதல் மனதை கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டுபோய்விடும் 50 வயதில் இறக்கவேண்டிய உடல் 30 வயதில் இறந்துவிடும்


----
மீரான் அன்வர்
சென்னை

பறக்கின்ற விமானத்தை பார்க்கையில் என்ன தோன்றும் ?
அதற்கு கொடுக்கப்பட்ட சிறகு போல் எனக்கும் ஒன்று தந்தால் நானும் சுதந்திரமாக பறந்து திரிவேன் இந்தக் கூட்டில் இருந்து என்று தோன்றும் .

மழயில் நனைவதைப்பற்றி?
மனிதர்களால் எனக்கு கிடைக்காத குளிர்மை இந்த மழை தருகின்றது என்று நனைந்து கொள்வது இப்பவும்.
அறிமுகமில்லாத நபர் உங்களைப்பார்த்து புன்னகைக்கயில் என்ன தோன்றும்?.
எதுவும் தோன்றது காரணம் சிந்திக்க நேரம் இல்லை:

கால்தொட்டுச்செல்லும் கடல் அலை பற்றி தங்கள் கருத்தது.

இதை விட வேறு என்ன இன்பம் உள்ளது ஒவ்வொரு அலையும் வந்து என் பாதங்களை தொட்டுவிட்டு செல்லும் போது நான் கடலாக இருந்திருந்தால் உன்னோடு கரைரைந்திருப்பேன் என்று நினைப்பேன்.

ஒரு நாள் முழுவதும் தனிமையில் இருக்க முடியுமா?
பத்து நாளும் இருப்பேன்.

என்றாவது நட்சத்திரங்களை எண்ணியதுண்டா?
நிறையத்தடவை எண்ணி தோற்றுவிட்டேன்

விபத்துள்ளான அனுபவம் ஃ அதைப்பற்றி நினைக்கும்போது?

எனக்கு முதல் இரண்டு ஆண் சிங்கம் . முன்றவது மான் குட்டி பிறந்து 6 மாதம் கணவர் ஜேர்மனி வருவதற்கு முதல் நாள் அம்மாவீட்டில் போய் மாமா விட்டுக்கு போய்யிட்டு வரும் போது எனது மகளை பார்த்து அழகாய் உள்ளது என்று அவளை மாறி மாறி கொஞ்சி வழி அனுப்பிவைத்தார்கள். பின் எனது கணவரின் வீட்டுக்கு வரும் போது நாங்கள் வந்த வாகனம் எனது கணவர்தான் அந்தவாகனத்தை ஓடிவந்தார் பெரிய மேட்டர் சையிக்கில் நான் என் மகளை மடியில் இருத்திய படி பின்னால் இருந்தேன் நான் வழுக்கி கிலே விழுந்தவுடன் எனது மகள் நடு றோட்டில் உறுண்டபடி போய்விட்டாள் எனக்கு அதிகமான காயம் கணவர் இறங்கி வருவதற்குள் பொரிய லொறி வந்து கொண்டு இருக்கின்றது என்னால் எழும்ப முடியவில்லை எதிராக ஒருவாலிபன் சைக்கிலில் வந்தார் மகளை கண்டதும் தன் சைக்கிலை லொறிக்குமுன் தூக்கி வீசிவிட்டு மகளை அப்படியே அனைத்து தூக்கினார் இந்த நேரத்தில் அவருக்க நன்றி சொல்லுகின்றேன்

காடந்த முன்று வருடத்துக்கு முன் எனது இரண்டாவது மகன் எங்கள் முன் விபத்தாகி மூச்சில்லாமல் இருந்து நாங்கள் எல்லோரும் கதறினோம் கணவர்தான் அவரை மடியில் தூக்கி முதுகில் தட்டி அவரை எழுப்பானார் இந்த இரண்டும் என்னை இப்பவும் சாகடிக்கும் நினைத்தால்

பயணத்தில் தூங்கும் அனுபவம் ?
தூங்கியே விடுவேன் எழும்பியவுடன் திட்டும் வாங்குவது உண்டு.
என்னை அடிக்கடி எழுப்புவது என் கடைக்குட்டி மான்.

முதல் காதல் கடிதம் கொடுத்த - வாங்கிய அனுபவம் - அதைப்பற்றி
கொடுத்தேன் வாங்கினேன் காதல் பொய்யானதால் மறந்துவிட்டேன்

நீச்சல் தெரியாமல் நீரில் தத்தளித்த அனுபவம்?
பத்துவயதில் கீரிமலைக்கடலில் தத்தளித்து பயத்தில் அழுதேன்.

உங்களை கடுமையாக திட்டும்போதுஃவிமர்சிக்கும்போது உங்கள் மன நிலை ?

திட்டியவர்கள் தான் அதிகம் நண்மை செய்தும் என் துரதிஸ்ரம் திட்டுத்தான். விமர்சிக்கும்போது அதில் குளிர்காய்வது இல்லை காரணம் அடுத்த நிமிடம் செய்யாத தவறுக்காக திட்டு வாங்கித்தர காலம் காத்திருக்கின்றது.


------

எனது கேள்வி!
உங்களை அதிகமாக நேசிப்பவர் ஒருவர் யார்? உங்கள் உறவினர்களை அல்ல..

என்னிடம் எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் அன்பை மட்டும் கொடுக்கும் ஒரு ஜீவன்
இன்னமும் பர்க்கவில்லை அவரை; சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் சுரேஸ் வயது 27

சு.சுகிர்தன்.
சிங்கப்பூர்.

--------

நினா கண்ணண்.

இயற்கை பாதுகாப்பு பற்றி தங்களின் கருத்து?

இயற்கையின் பாதுகாப்பை பற்றி சொல்வதென்றால்
இப்போ எல்லாமே திடீர் என நடந்து முடிந்து விடுகின்றது பாதுகாப்பை கொடுத்தாலும் அதையும் தாண்டி அழிவுதான் அதிகமாய் உள்ளது

பொதுவாக காட்டில் வாழும் மிருகங்களை எடுத்துகொண்டால் அதிக பாதுகாப்பு இல்லாமல் அழிந்து கொண்டு இருக்கின்றது சரியான பாதுகாப்பு இல்லாமல்
ஏனோதானோ என்று சில இடங்களில் விட்டுவிடுகின்றார்கள்.
முன்கூட்டியே பாதுகாப்பு கொடுத்தாலும் இயற்கையின் அழிவில் இருந்து தப்ப முடியாது.

2-மனம் சொல்வதை கேட்கலாமா? அல்லது மற்றவர்கள் சொல்வதை கேட்கலாமா?
முதல் நம் மனம் செல்வதை கேளுங்கள் சரியாக இருந்தால்.மற்றவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்தால் சரியாக இருக்க முடியாதுசிலசமயம் சரியாக இருக்கும் சில சமயம் பிழையாக தோண்றும் நாம் சரியாக நடந்தால் நம் மனம் செல்வதும் சரியே.
-


எனது கேள்வி.

சகோதரி! திருமணம். தாலி; புனிதம். என்று விருப்பமில்லாத வாழ்வில் பல ஆண்களும்: பெண்களும் நிர்ப்பந்தத்தினால் கட்டுப்பட்டு வேதனையை அனுபவித்து ஒப்புக்கு வாழ்கிறார்களே; இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

வேதா. இலங்காதிலகம்

ஓகுஸ். டென்மார்க்


திருமணத்தின் முன் இருவரும் பேசி முடிவெடுக்க வேண்டியது முக்கியமாகும் அன்றுதான் மணவறையில் பெண்ணை பார்ப்பது என்று ஒரு வரையறைக்கு தள்ளப்பட்டார்கள் இப்போ அப்படி இல்லை இருவரும் மனம் நிறைவாக பேசி முடிவெடுக்க பெற்றோர்களே பெண்பார்க்க வரும் போது தீர்க்கமாக முடிவெடுக்கச் சொல்லி கூறுகின்றனர்.
ஆனால் அப்படி முடிவொடுத்தாலும் ஏனோ தெரிய வில்லை பொய்யாக வாழ்க்கை நடத்துகின்றனர்.தாலியை போட்டுக்கொண்டு புனிதமாக நடப்பது போல் வெறும் ஒப்புக்குத்தான் வாழ்கின்றனர்

இதற்கு பல காரணங்கள் உண்டு.
1- இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள மறுப்பது.
2- சில விசயங்களில் விட்டுக்கொடுக்காமல் இருப்பது.
3- இருவரும் ஒருவரை ஒருவர் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுப்பது.
4- கனவன் மனைவி என்ற உறவை மறந்து யார் பெரியவர்கள் என்ற வேறுபாடுகளை புதைத்துக்கொள்வது.
5-இருவரும் வேலைக்குச் செல்வது ஒருவரை ஒருவர் பேச நேரம் இல்லாமல் போவது;
6 தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்படுவது.
கணவர் கேட்கும உதவியை மனைவியும் மனைவி கேட்கும் உதவியை கணவரும் மறுப்புச்சொல்வது.


இப்படி ஒவ்வொரு பல வடயங்களும் போறாடி போறாடி தான் ஒவ்வொருவரும் வாழ்வை வெறுக்கின்றனர்.
புலம் பெயர்வில் வளர்ந்து வரும் பிள்ளைகள் எல்லாவற்ரையும் சாதாரணமாக எடுக்கும் பழக்கமாக உள்ளது அதனாலும் வாழ்வு சீரழியத்தான் செய்கின்றது

பிடிக்கவில்லையா உடனே விவாகரத்து ஏன் பேசி தீர்மாணம் எடுக்க மறுக்கின்றனர்.
பேசி தீர்மாணம் எடுத்தால் மட்டும் போதாது. இருவரும் அப்படி வாழனும் கொஞ்ச நாள் வாழ்ந்து விட்டு பிறகு அதே சண்டை .
இதற்கு காரணம் இங்க அதிகமான வசதிகள் உள்ளதால்தான். இப்படி தடம் புறளுகின்றார்கள்.

விரும்பாத வாழ்வை அமைத்து வெறுப்போடு வாழ்வதை விட விரும்பி ஏற்றுக்கொண்டு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

சில பெற்ரோர்கள் தாங்கள் பிள்ளைகளை பணம் சிலவு செய்து படிப்பித்தோம் அதனால் அதிக சீதனம் வாங்கி செய்வதற்கு பிள்ளைகளை கட்டாயப்படுத்தி போறடி தினித்து விடுகின்றர் தங்கள் சுயநலத்துக்காக. இதுவும் பெரிய குற்றம் தான்.இதனாலும் வாழ்வில் கசப்போடு வாழ்கின்றார்கள்.
எல்லோரும் எடுக்கும் முடிவில் சீர் இருக்கவேண்டும் கவனமாக வழி நடக்கவேண்டும;

---


நினா.கண்ணன்
சங்கரன்கோவில்-நெல்லை(Dt)

ஊடகங்களால் மனித வாழ்வு வளர்ச்சியடையுமா?

கண்டிப்பா இல்லை, காரணம் ஒரு வானொலி ஊடகத்தை எடுத்துக்கொண்டால் அதில் எந்த ஒரு வாழ்வின் வளர்ச்சி அடையச்சாத்தியம் இல்லை!!1
காலத்தின் மாற்றங்கள் ஏற்படும் போது ஒவ்வொரு அறிவிப்பாளரும் மாறிக்கொண்டு இருக்கின்றார்கள் அப்படி மாற்றம் எற்படும் போது மனிதர்களும் மாறிக்கொண்டு இருப்பதை கானக்கூடியதாக உள்ளது.
இன்று ஒருவரை பாராட்டி நாளை ஒருவரை பாராட்டி தங்கள் பொழுதுபோக்கிற்காக ஒவ்வொரு வரும் அறிவிப்பாளர்களை பயன் படுத்தி விடுகின்றனர்.
ஒரு மனிதனின் வழிப்புணர்வகளை அறிய மறுத்து தங்கள் பெயருக்க மட்டும் வானொலியில் போய் அறிவிப்பாளர்களை உயர்த்திப்பேசி பொய்யுக்குள் வரவழைத்து சீர்கெட செய்து விடுகின்றனர்.

இதை உணரமறுத்து இன்று எத்தனை கூடகங்கள் அழிந்து போய்விட்டன! எத்தனை அறிவிப்பாளர்கள் காணமல் போய்விட்டார்கள்!


எந்த ஒரு ஊடகங்களாக இருந்தாலும் வார்த்தையில் உண்மையும் எல்லோருக்கும் சம உரிமையும் கொடுத்து வந்தால் வாழ்வில் கொஞ்சமாவது வளர்ச்சி அடையலாம்..
-----------

சுரேஸ்
சிங்கப்பூர்.


வாழ்க்கையில் என்றும், எப்பொழுதும் தனித்து நிற்கும் துணிவு பெருவதற்கு,தேவையான பண்புகள் எவை?
இது சாத்தியமில்லையெனில் அது ஏன்?

தன்னடக்கம் ,தன்நம்பிக்கை, மனத்துணிவு, எதையும் செய்து முடிக்கமுடியும் என்ற வைராக்கிய மனம், வாய் சொல்லில் உண்மையாக இருப்பது , சயநலம் அற்றதாகவும் எதையும் எதிர்பாராததாகவும் இருக்க வேண்டும் .
இத்தனையும் விட நோய் நம்மை கிட்ட நெருங்காததாக இருக்கவேண்டும்.

--
இது சாத்தியமில்லையெனில் அது ஏன்?
---
தனித்து நிற்பது என்பது இளமை பருவத்தில் ரத்ததுடிப்பு இருக்கும் வரை அது சுகமாகத்தான் இருக்கும். இதே முதுமையடைந்தபின் ஒரு துணை தேவைப்படுகின்றது.

இதுஎதிர்பார்ப்பில்லாது ஒவ்வொரு நல்ல சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளவும்
அமைதியாக இருக்கவும் உதவும் என்று நினைக்கின்றேன்.
இங்கேயும் இருவருக்குள் எந்த எதிர்பார்ப்பும் சயலமும் இருக்ககூடாது.
ருவரை ஒருவர் அன்பாக வழிநடத்திச்செல்லும் தன்மையுடையதாகா அமைய வேண்டும்.


இன்னும்
ரு பாதையில் பார்த்தால்.-தனிமையில் இருப்பது என்பது கஸ்ரமாகத்தான் இருக்கும் காலத்தின் மாற்றத்தால் இத்தனை பண்புகளும் நம்மோடு இருந்தாலும் நோய் என்ற ஒன்று நம்மை சுற்றி விட்டால்.நாம் அப்படியே படுக்கையில் ருந்தே மரணிக்க வேண்டியதுதான்.
எவ்வளவு பணம் இருந்தாலும் இத்தனை பண்புகள் இருந்தாலும் நம்மை காப்பாற்ற முன் வருவது ஏதோ ஒரு உறவு . அது எந்த உறவு முறை யாக இருந்தாலும் பறவாய் இல்லை நமக்காகவே வாழும் ஒரு உறவு வேண்டும்.


---

த.வேலுச்சாமி
மதுரை.

நீங்கள் விரும்புவது எது?வெறுப்பது எது?

இந்தப்பிறவி போதும் என விரும்
புகின்றேன்.
உள் ஒன்றை வைத்து புறம் ஒன்று பேசுபவர்களை வெறுக்கின்றேன்.
எனது அடுத்த கேள்வி

உங்களை மகிழ்வித்த வி
யம் அதிக துக்ககரமான வியம் சொல்லுங்க.

நான் தாய்மை எனும் பிறவி எடுத்
து என் மூத்த மகனை கையில் எடுத்து முத்தம் கொடுக்கும் போது மகிழ்ந்தேன்.

என் தாயின் தந்தையின் மரணத்தை பார்வையிடாதபோது
இன்னமும் வெந்து கொண்டு இருக்கின்றேன்.------

சுகந்தி
Cmr கனடா வானொலி அறிவிப்பாளர்.

ராகினி உங்களோடு நான் உரையாடியதை நினத்து பெருமை அடைகின்றேன்.
வெகு விரைவில் உங்களை பார்வையிட ஆசைப்படுகின்றேன்.

(1) உங்கள் பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டு உங்களால் எப்படி இத்தனை படைப்புக்களையும் நிகழ்ச்சியும்தயாரிக்க முடிகின்றது!!! எப்படி முடிகின்றது அதை தெளிவாக சொன்னால் நானும் முயற்சி செய்துகொள்ள முடியுமா? என்று பார்க்கின்றேன்;

உங்கள் பிறந்தநாளும் தீபாவளியும் ஒன்றாக வந்ததால் எதை கொண்டாடினீர்கள்.
--
உங்களுக்காக என் இல்லக்கதவு திறந்தே இருக்கும்.

எப்படி முடிகின்றது என்று எதை சொல்வது! அதிகமான பேர்கள் வோலையை செய்வதில் மனதில் கள்ளத்தனத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.
உறங்கப்போகும் போது மனதை குழப்பிக்கொள்வார்கள். நாளை இத்தனை வேலைகளையும் எப்படி முடிக்கின்றது என்னால் முடியுமா..? என்று மனதை போட்டு சித்திரவதைப்படுத்திக்கொள்வார்கள் நன்றாக தூங்கம் கொள்வதை மறுத்து சிந்திப்பதில் தான் குறியாக இருப்பார்கள் ஏன் யாரும் வருவதாக சொன்னால் முதல் நாளே சினம் வைத்துக்கொள்வார்கள்.

ஏன் இப்படி இருக்க வேண்டும்.

அவசியமே இல்லை என்னை பொறுத்தவரை நான் எதையும் சிந்திப்பது இல்லை உறக்கத்துக்கு சென்றால் முக்கியமாக மனதில் எதுவும் எடுத்துக்கொள்ள மாட்டேன் நல்ல இசை மட்டும் என்மனதில் ஓடிக்கொண்டு இருக்கும் அப்படியே உறங்கி அதிகாலை 4 மணிக்கு ஓருவாரமும். ஒருவாரம் அதிகாலை 5 மணிக்கு எழுந்து விடுவேன். வீட்டில் எழுப்பும் மணியோசை (4மணி 5மணி) வேலைக்கு செல்பவரின்.நேரமாற்றம்தான் காரணம்.
எழுந்து ஒவ்வொரு பொழுதும் எனக்குரிய வேலைகள் எதுவோ அதை மனதில் பெரிய வேலை என்று நினைக்காமல் அப்படியே வரிசை வரிசையாக செய்து முடித்துக்கொள்வேன் சில மணி நேரம் கிடைக்கும்கு போது அதை என் எழுத்துக்கள் வடிவில் என்னை எடுத்துவருவோன் டி வி க்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்
பொதுவாக நாடகம் பார்வையிடுவது இல்லை ஏன் என்றால் அதோடு ஊறிவிட்டால் எல்லாம் திசைமாறிவிடும்.வீடேஉருக்குழைந்துவிடும்.
என்னால் முடியும் என்று தொடங்கி எல்லாம் முடித்துவிடுவேன்.
காலை எழுந்தால் மனது தானாக ஒவ்வொரு விடயங்களுக்குள் என்னை வழிநடத்தி செல்லும் இது கடவுள் எனக்கு கொடுத்த வரமும். என்தாயின் வளர்ப்பில் கிடைத்த வரமும் தான் காரணம் இன்று என்னால் நடமாட முடியவில்லை என்றாலும் கடசிவரை போறடி அத்தனை கடமைகளை முடித்துவிட்டுதான் ஒருமணிநேரம்தான் உறங்குவோன் மீண்டும் தொடங்குவோன் என் கடமையின் பயணத்தில்.

(2)என் பிறந்தாள் இந்தமுறைதான் தீபாவளியோடு அமைந்துள்ளது நான் இரண்டும் கொண்டாடுவதில்லை என்னை சுற்றி இருப்பவர்களுக்கு கொண்டாடி மகிழ்வேன்.
--------


நகைச்சுவை செல்வர் இளசை சுந்தரம்.
செல்வபுரம் கோயம்புத்தூர்-26


கவிதையின் நோக்கமாக இருந்தாலும்.இல்லை இலக்கியத்தின் நோக்கமாக இருந்தாலும்
வாழ்க்கைநெறியில் மக்களுக்கு எப்படி எடுத்துக்காட்டாக அமையவேண்டும்..?

எந்த ஒரு படைப்பாளியும் மக்கள் மனதை நோகடிக்காத எழுத்துக்களை முன்வைக்க வேண்டும் .
வாழ்க்கையின் முன்நேற்றத்துக்கு நல்ல வழிகாட்டக அமைய வேண்டும் இலக்கிய சிந்தனைகளும் கவியின் சிந்தனைகளும்கோட்பாடுகளும் முழுமையாக செழுமைப்படுத்தப்படவேண்டும்.

சில சமையம் இலக்கியத்தின் கருத்துக்கள் அறிந்து கொள்ள கஸ்ரத்தை கொடுத்துவிடும். சூழல்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் வளர்ந்து வரும் மக்களையும் தெளிவாக அறிந்து கொள்ளும்படியாக
அமையவேண்டும்.
நன்றி ஜயா உங்கள் வருகைக்கு.


சென்னை சூரியன் எப்.எம் அறிவிப்பாளர்
அன்பான அருன்

எப்போதும் புன்முறுவலோடு காணப்படுபவர்கள் ஆண்களா ? பெண்களா?

இருவருக்குமே புன்முறுவல் உண்டு ஆனால் அதிகமாக பெண்கள்தான் காரணம் எதையும் சமாளிக்கும் தன்மை உடையவர்கள்.

----
வேல் கண்ணதாசன்.
(சென்னை சூரியன் எப்.எம் அறிவிப்பாளர்)
தமிழ் கவிதை உலகில் பெண்களை பற்றி செல்லுங்க?

பெண்களை பற்றி சொல்வது என்றால் அண்றைகாலகட்டதில் அடிமையாக வாழ்ந்த பெண்களை முறியடித்து இப்போ கவிதப்பெண்களாக வளர்ந்து வருகின்றனர் எதையும் சாதிக்கும் திறன் கொண்டவர்கள் தடைகள் போட்டாலும் தங்கள் லட்சியப்பாதையில் வெற்றிநடைபோடுபவர்களாக இருக்கின்றனர். எதையும் துணிவோடு போறாடி வெற்றியை கையில் வாங்குபவர்கள்தான் இந்த தமிழ்கவிதைப்பெண்கள்.Subha Chellappan
. u.s.a

(1)வாழ்க்கையில் வெற்றிபெற முக்கியமாக ஜந்து ரகசியங்கள் என்ன???
----
முதல் தெளிந்த மனது
விடாமுயற்சி .
நாம் இருக்கும் நிலை அறிதல்
என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்குதல்.
மனதை என்றும் உற்சாகத்துடன் வைத்துக்கொண்டு அடுத்தது என்ன செய்யவேண்டும் என்று விழித்துக்கொள்வது அவசியம்.
நமது உடலில் இருந்து சோம்பல் என்ற நோயை ஒட்டிக்கொள்ள விடக்கூடாது.

நாம் உயர்து செல்வது எப்படி என்று உங்களுக்குளே கேள்வி என்ற விதை போடவேன்டும்
அப்போது உங்கள் மனதில் எழும் பதில்கள்என்ற விதை ஒவ்வொன்றும்.முழைக்கதொடங்கினால் வெற்றிதான்.
(2)
-------
நட்பு என்றென்றும் நீடித்திருக்க நண்பனாக செய்வேண்டிய கடமைகள் என்ன?? செய்யக்கூடாதவை என்ன??

நட்பு நீடித்திருக்க முதல் புரிந்துகொண்டு நடப்பது ஒருவரை ஒருவர் முழுமையான அன்பை பரிமாறிக்கொள்வது கஸ்ரத்தில் கை கொடுத்து அவன் தடுமாறிக்கொண்டு இருக்கும் பிரச்சனைகளில் இருந்துவிடைபெறச்செய்வதும் தான் நட்பின் அடையாலம் ஆகும்.
நாம் பணத்தை கொடுத்து வாங்கும் நட்பும் நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை சில நட்பு வந்து நம்மிடம் இருக்கும் வரை ஒட்டிக்கொள்வது இல்லாத போது விட்டுச்செல்வது அப்படிப்பட்ட நட்பை ஆரம்பத்திலே தெரிந்து கொள்ள வேண்டும்.

தாய் பெற்றதால் பாசம்; தந்தை மார்போடு சுமந்ததால்; பாசம் சகோதரர்கள் கூடிப்பிறந்ததால் பாசம்; பணத்தை கொடுத்து வாங்கிய கணவர் ஒரு பாசம், இது நிஜதி.

ஆனால் எதுவும் எதிர்பாராமல் நம்மை நம் உணர்வுகளை புரிந்து விழுந்த போதெல்லாம் தூக்கி நிறுத்தி விட முன் வந்து இறுதிவரை வாழும் நட்பு அதுதான் உண்மையின் பாசத்தின் வேர்.

நீங்கள் காப்பாற்றிக்கொள் வேண்டியது நண்பரோடு உண்மையின் சத்தியமாக வாழனும். கஸ்ரத்தில் கை கொடுக்கவேண்டும்.மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும்.
பொய் என்பதுக்கு இடம் கொடுக்காமல் இருக்கவேண்டும்.

செய்யக்கூடாதது எப்படித்தான் நண்பராக இருந்தாலும் அவன் சரியான பாதையில் போய்கொண்டு இருந்தால் தேவையில்லாத விடயங்களுக்கு மூக்கை நுழைக்காமல் இருக் வேண்டும்.
இன்னொரு நட்பு கிடைத்துவிட்டால் இருக்கும் நட்பை தூக்கி வீசக்கூடாதுஇன்னும் அதிகமாக நேசிக்கவேண்டும்


நினா.கண்ணன்
சங்கரன்கோவில்-நெல்லை(Dt)
மஹாநதி ஷோபனா பற்றி?

ஷோபனாவின் குரல் தேனில் குழைத்து எடுத்த பஞ்சாமிருதம் பக்தியின் ஒளி கர்நாடக சங்கீதத்தின் சிகரம் அவர் பாடிக்கொண்டு இருந்தாலே நம்மை மறந்து சில நிமிடம் அப்படியே அமரச்செய்துவிடும் மனதில் எத்தனை வலிகள் இருந்தாலும் அவரின் குரல் நோய்க்கு மருந்தாகிவிடுகின்றது.

இது அவருக்கு கொடுத்த அற்புதப்பிறவி என்றுதான் சொல்லலாம். சங்கீதம் இவரால் அழகு பெற்றதா..? இல்லை இவரால் சங்கீதம் அழகு பெற்றதா..? ஆராய்து பார்த்தாலும் விடை கிடக்கவில்லை.அந்த அளவுக்கு தனித்துவம் கொண்ட குரல் பக்திப்பாடலில் இறைவணைக்கானலாம் அவரின் குரலில் .


----
முத்து சென்னை.

ஆசைகளை அகற்றுவது எப்படி.?

ஆசை என்பது கொடிய நோய் எப்படித்தான் அகற்றினாலும் மீண்டும் மீண்டும் நம்மை வட்டமிடத்தான் செய்கின்றது இது பாதாளத்தில் கூட தள்ளிவிட்டு கைகொட்டி சிரிக்கும்.
அளவோடு இருந்தால் இதமாகவாழ முடியும் அசையை வளர்ப்பதும் அகற்றுவதும் உங்கள் மனதில் உள்ளன.

வினோத் சென்னை.
எனக்கு பல கேள்விகள் உள்ளனவே. எதைப்பற்றி வேணும்னாலும் கேட்கலாமா? ஒவ்வொன்றாக
கேட்கிறேன்.
முதலில்.
1. சந்தோஷம் எதுவரை, நட்பு எதுவரை, காதல் எதுவரை, அன்பு எதுவரை, மதிப்பு, பணம்,
இப்படி எல்லாது எதுவரை. அதாவது எப்போது இவைகள் உருமாற்றம் பெறுகிறது அல்லது
மதிப்பிழக்கிறது?

சந்தோஷம்-அன்னையின் கைக்குள் இருக்கும்வரை.
நட்பு-உண்மையான நட்பு இறுதிவரை.

காதல் -ஒருவரைஒருவர் புரிந்துகொள்ளும் வரை

அன்பு-மதிப்பு-பணம் இருக்கும் வரை மதிப்பு இருக்கும்.

பணம் .-சுயமாக சம்பாதிக்கும் வரை.

இத்தனையும் நீங்கள் கொடுக்கும் போது உங்கள் உருமாறுகின்றது
அதாவது உங்கள் நிலை மாறுகின்றது எல்லாம் உங்களை தேடி வலம் வருகின்றது. இத்தனையும் உங்களிடம் இல்லாத போது நீங்கள் மதிப்பிழந்து போய்விடகின்றீர்கள்.
---
நினா.கண்ணன்
சங்கரன்கோவில்-நெல்லை(Dt)


சமுதாய மாற்றம்' என்பது யாரால்.எப்படிப்பட்ட மனிதர்களால் ஏற்படும்?
-
சமுதாய மாற்றம் மாறக்காரணம் வளர்ந்து வரும் பிள்ளைகளால் தான் மாற்றம் அடைகின்றது நமது கலாச்சாரத்தை தூக்கி எறிந்து விட்டு வாழும் சூழ்நிலைகளை காரணம் காட்டி தன்னடக்கம் பணிவு என்பதை மறைத்து வாழுவதால் தான் சமுதாயம் மாற்றம் அடைகின்றது ஒருவிதம்!
இன்னொரு பக்கம் பார்வையிட்டால் வளர்க்கும் பெற்றோர்கள் காரணமாகிவிடுகின்றனர் தங்கள் பிள்ளை இப்படி ஆடை அனிந்தால் தான் தங்களுக்கு மரியாதை தாங்களும் அந்த நாட்டவர்கள் என்று கூறி பெருமை அடைவது.
இன்னொருபக்கம்.குடிபோதைக்கு அடிமையாகி வாய்க்குள் பொய்யும் புறட்டும் என்று மக்களை தன் வசமாக்கி சீர்கெடவைப்பது.-தனது கையில் அதிகாரத்தை எடுத்து மற்றவர்களை அடிமையாக்கி அதில் குளிர்காய்து கொள்வது. பண்பாடு உருக்குழைந்து பெரியவர்கள் முதல் சிறிவர்கள் வரை சுயநலத்தோடு வாழ்வது இப்படி ஒவ்வொரு விதமான மானிடர்களால் தான் சமுதாய மாற்றம் அடைகின்றது.

sherinprakash.chennai

உங்களை மிகவும் கவர்ந்த கவிஞர்யார்?
கண்ணதாசன்; வைரமுத்து .


நினா.கண்ணன்
சங்கரன்கோவில்-நெல்லை(Dt)


தமிழ் வளர என்ன செய்ய வேண்டும்?முதல் நாம் பெற்ற தமிழை நம் பிள்ளைகளுக்கு உணவாக கொடுக்க வேண்டும் ஒவ்வொரு இல்லங்களிலும் இது நடைபெற.வேண்டும்நாம் உரையாடும் போது தமிழில் உரையாடவேண்டும் தமிழ் கலந்த ஆங்கிலம் தானே அதிகமாக உள்ளது. இதை விட வெளியிடப்படும் புத்தகங்கள் அதிகமாக ஆங்கிலத்தில் வருகின்றது.தமிழில் அச்சிட்டு வெளியிடவேண்டும். எந்த துறைகளுக்கு படிக்கச் சென்றாலும் தமிழில் பாடம் கற்பிக்க வேண்டும் .இது. தமிழை மறந்து தமிழர் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை ஒவ்வொரு மனிதர்களும் சிந்திக்க வேண்டும: ஒவ்வொருவருடன் சந்தித்து உரையாடும் போதாவது தமிழ் பேசுங்கள். எங்கே நாம் வாழ்ந்தாலும் நம் தமிழை அழிந்து போக விடாது ஒவ்வொரு சந்ததியாக வளர்தெடுக்கவேண்டும்.என்பதை மறந்துவிடக்கூடாது.