Thursday, October 23, 2008

விஜயா.லண்டன்

உண்மையான நட்பு என்பது எப்படி இருக்க வேண்டும்.
நல்ல நண்பர்களை எப்படி அடையாளம் காணுவது?

உண்மையான நட்பு என்பது அவன்சந்தோசமாக இருக்கும் போது அவனோடு கூடிக் குலாவிமகிழ்வதை விட.அதிலும் அதிகமாக அவன் கஷ்டத்தில் இருக்கும் போது அவனோடு கூட இருந்து அவனை அரவணைத்து தூக்கி நிறுத்தி விடுவதே..உண்மையான நட்பு நல்லநண்பர்களை அடையாளம் கண்டு கொள்வது அவனோடு கூட இருக்கும் நண்பர்களைகண்டும் ஒருநாள் பேசிப்பார்க்கும் போதும் அறிந்து கொள்ள முடியும்.

கே.மாலதி,ஜேர்மனி

உங்களால் இன்றும் மறக்க முடியாத பள்ளிக் கூட ஆசிரியர்கள் பற்றி சொல்லுங்கள்?

என் வாழ்வில் மறக்க முடியாத ஆசிரியர் இரண்டு பேர் ஒன்றுதிருமதி.சண்முகலிங்கம் ஆசிரியர்
இரண்டு திரு தர்மலிங்கம் அதிபர் இருவருமே என்னோடு அன்பாக பழகியவர்கள்.

செல்வ நாயகம். கனடா

உங்கள் அபிமான பாடகி. பாடகர் யார்?

எஸ்.பி பாலசுப்பிரமணியம் பி சுசிலா.இருவரும் என் மனதை கவர்ந்த பாடகர்கள் இருவரும் என்பதை- விட என்னை அதிகம் கவர்ந்த பாடகர்கள்.டி.எம்.எஸ்
கே.ஜே ஜேசுதாஸ்

ஆர்.ராம கிருஷ்ணன். மந்தை வெளி.தமிழ் நாடு

திரைப் பட பாடல்களைக் கேட்க வேண்டும் என்ற தாகத்தை உங்களுக்குள்
முதன் முதலாக விதைத்த சம்பவம் அல்லது அனுபவங்கள் எது?அல்லது எவை

எனக்கு பாடல்களை கேட்க வேண்டும் என்ற தாகத்தை தீர்த்தவர் என் தந்தை அவர் அதிகமாக இசையை நேசிப்பவர் அவர்தான் என்னை இசையோடு
ஐக்கியமாக்கியவர்
பாடல் கேட்ட முதல் காரணம் என்தந்தை! வேலை முடிந்து வரும் போது ஒரு கிறாமபோன் வாங்கி வந்தார் எனக்கு வயது 5 இருக்கும் கொண்டுவந்ததும் என்னை அதன் அருகில் இருத்தி ஒரு
ஒரு பாடலை ஒலிக்க விட்டு சொன்னார்.(அந்தபா
ல் )"வண்டாடும் சோலை தனிலே கண்டனெ துள்ளம் உண்டான் சகியே.." என்றபாடல் இதை கேட்டு நீ அப்படியே அப்படியே பாடணும்.
என்று என்னை இசையோடு வாழ
வைத்த பெருமை என் தந்தைக்கு மட்டுமே.

பரணீதரன், அமெரிக்கா

இந்த வருடம் வெளியான புத்தம் புதிய பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?
.கண்கள் இரண்டால்..உன் கண்கள் இரண்டால். என்ற பாடல்.
அம்புஜம் , மயிலாடுதுறை

உங்கள் பிள்ளைகளும் உங்களைப் போல கவிதை எழுத வந்தால் அவர்களை ஊக்குவிப்பீர்களா? அல்லது பல பெற்றோர்களைப் போல...?

கண்டிப்பாக ஊக்கம் கொடுப்பேன் அவர்கள் முன்னேற்றத்துக்கு தடை கொடுப்பதை விட நல்ல தோழியாய் இருந்து தட்டிக்கொடுப்பேன்.


விஸ்வா.அமெரிக்க.

வணக்கம் ராகினி.
வெறுப்பு என்றால் என்ன?வெறுப்பு வரக்காரணம் ஏன்.?

வெறுப்பு என்றால் நமக்கு பிடிக்காத விஷ்ம் என்றால் அது சினமாக மாறி வெறுப்பாக வருகின்றது.
ஒவ்வொருவர் நடக்கும் விதம் கண்டு வெறுப்பு வருகின்றது.

உயர்வு என எதை அடையாளம் கண்டீர்?

நமக்கு கிடைக்கும் உயர்வை விட நாம் ஒருவரை உயர் நிலைக்கு கெண்டுவந்து அவர் மனதில் ஏற்படும் சந்தோசம் தான் உயர்வின் சிம்சானம்.

கவலைகளை மறக்க வழி உண்டா?

கவலைகளை ஏற்படுத்தாது உங்கள் மனதை திடப்படுத்திகொண்டால் மறக்க வழி இதுவே.

மீண்டும் கேள்வி கேட்க இடமுண்டா?

கண்டிப்பா இடம் உண்டு.

றஜனி சுவிஸ்.

மனம் தெளிவடைய என்ன செய்ய வேண்டும்?

அழுக்கை அகற்றி விட்டு நிம்மதியாய் உறங்கவும்.

கா. துளசி நேர்வே.
அதிகமான துக்கம் எதனால் வருவது?

நாம் ஒருவர் மீது வைக்கும் அதிகமான நம்பிக்கையும்
அதிகமாக காட்டும் அன்பும் தான். அதிக துக்கத்தை வரவைப்பது.

த.சிவா.குவைற்

கருணை உள்ளம் என்கின்றர்களே எப்படி கண்டுகொள்வது?

பகைவனாக இருந்தாலும் உயிர்போகும் நிலையில் அவன் அகப்பட்டுக்கொண்டால்
உதவிக்கரம் கொடுப்பவன் எவனோ? அவன்தான்.

நீங்கள் அதிகம் விரும்புவது எது?
இசை.

தி.கரன்.மலேசியா.

அறியாமை என்பது எது?அறிவு என்பது எது?

இருளும் ; வெளிச்சமும் போல்.

வ. திவ்யா இத்தாலி.

கறடு முரடுகளை தவிர்த்துக் கொள்வது எப்படி?

நேராக செல்லும் ஒரு பூஞ்சோலையில் நீங்கள் பயணம் செய்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

உதய குமார் .சென்னை.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளாதா? உங்களுக்கு பிடித்த மதம் எது?

கடவுள் நம்பிக்கை உள்ளது ஆனால் மூட நம்பிக்கை கிடையாது.எம்மதமும் சம்மதம்

5 comments:

யாழ் சுதாகர் said...

அருமையான பகுதி.

தன்னடக்கமான பதில்கள். இயல்பான நடை.

நல்ல நண்பர்களை அடையாளம் காட்டும் வரிகள்..உண்மைக்கும் போலித்தனத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கும் நட்புக்கு சரியான திசையைக் காட்டட்டும்.

தங்கள் தந்தையாரின் 'கிராமபோன்' பற்றிய வரிகள்
நெகிழ வைத்தன.
'அந்த நாளும் வந்திடாதோ..'என்று உருக வைத்தன.

சில பதில்களில் அச்சுப் பிழைகள் உள்ளன.
திருத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்
யாழ் சுதாகர்

rahini said...

யாழ் சுதாகர்
உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் என் நன்றிகள்

றெனிநிமல் said...

வணக்கம் ராகினி.
நலந்தானே.

மிக நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் வலைத்தளத்தினுள் வருகின்றேன். (டீ, கோப்பி போட்டு தரமாட்டீர்கள்? ஹி ஹி ஹி....)

அடடா! புதிதாக கேள்வி பதில் எல்லாம் ஆரம்பிச்சாச்சா! நல்லது நல்லது.

நானும் எதாவது கேள்வியை தேடிக் கொண்டு வாரன்.

இவன்
றெனி

rahini said...

waruga reni ungka keelvikal malaratum

Unknown said...

Hai friends!!!!!! Don’t forget to give us a booking with any plumbing or other related home repair services..
Services: Water tap repair and replace, Pipeline blockage and leakage repair, Toilet basin repair, pvc pipe repair, kitchen pipe blockage,water jet pump repair,pipe drainage etc.,
Plumbing
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/